The Tamil life philosophy [தமிழர் தம் மெய்யியலும் வாழ்வியலும்]

Authors

  • N.Hemamalini Doctoral Candidate, International Institute of Tamil Studies, Chennai, India

Keywords:

தமிழர், மொய்யியல், வாழ்வியல், The Tamil, Philosoph, Life Style

Abstract

மெய்யியல் என்பது பிலோசபி என்னும் சொல்லில் இருந்து உருவானதாகும். கிரேக்க மொழியின் வேர் சொல்லில் இருந்து இச்சொல் தோன்றியது என்பதன் அடிப்படையில் மெய்யியல் என்பது அறிவின் முதிர்ச்சி மெய்யியல் என்றாகிறது. அறிவின் முதிர்ச்சியில் மனிதன் தன்னைத் தானே உணரும் ஆற்றலைப் பெறுகிறான். தமிழரின் மெய்யியல் அவன் வாழ்வியலோடு பிணைந்த ஒன்றாக உள்ளது. தமிழன் தோன்றிய காலம் முதலே அவன் வணங்கும் தெய்வமாக இயற்கையைக் குறிக்கிறான். பிரபஞ்சத்தின் இயக்க சக்தி இயற்கை என்பதைத் துல்லியமாக அணுகி உள்ளான். மேலும், தான் கண்டறிந்தவற்றை வணங்குவதோடு மட்டும் அமையாது கதைகளாகவும், புராணத்தொன்மங்களாகவும், இதிகாசத் தொன்மங்களாகவும் அடுத்த தலைமுறையினருக்கும் உதவும் வகையில் இறைநம்பிக்கை வடிவில் மெய்யியலைக் கடத்தியுள்ளான். அவ்வாறு இலைமறை காயாகவும், வெளிப்படையாகவும் மக்களிடத்தில் சேர்க்க தேர்ந்த மொழியியல் அறிவைக் கையாண்டுள்ளான். அதன் வழியில் தமிழனின் தொன்மங்களை அணுக மொழியியலை உட்புகுத்தும் போது அதிகப்படியான மெய்யியல் அறிவை பெறமுடியும். அதாவது, இலக்கியங்களில் கையாண்டுள்ள நேரடிப்பொருள், மறைமுகப்பொருள், குறிப்புப்பொருள், வெளிப்படைப்பொருள், சூழல்பொருள், சுட்டல் பொருள், சுட்டல் மதிப்புப்பொருள், உணர்தல் பொருள், பிரதிபலிப்புப் பொருள் என்று இன்னப்பல பொருள்களை ஆராய்வதன் மூலம் பல்வேறு வகையான மெய்யியல் அறிவை வெளிப்படுத்த முடியும் என்பதாக இவ்வாய்வு அமைகிறது.

[“Meyyiyal” can be defined as a theory or attitude that acts as a guiding principle for behaviour. The development of “Thamizhans” is depending on two factors namely, “Meyyiyal” and “Vazhviyal” as an interconnected agent. Nature worship system largely practiced by “Thamizhans” with a strong belief that nature or god are part of or in charge of universe. In addition, “Thamizans” successfully transform “Meyyiyal” to the next generation through tales and myths by enhancing “Mozhiyiyal”. It is also identified that in the line of identifying speciality of “Thamizhans” through “Mozhiyiyal” where “Meiyiyal” are nurtured. Therefore, this study discuss about ‘Neradiporul’, ‘Maraimugaporul’, ‘Kurippuporul’, ‘Velippadaiporul’, ‘Suzhalporul’, ‘Suttalporul’, ‘Suttalmatippuporul’, ‘Unarthalporul’ and ‘Pirathipalipuporul’ as the elements involved in “Meiyiyal”.]

References

Kesavan, K. (1998). Philosophy (மெய்யியல்). Colombo: Gopika Publications.

Rajendran, S. (2009). Porunmaiyiyal (பொருண்மையியல்). Thanjavur: Tamil University.

Ettuttokai books sources and texts (எட்டுத்தொகை நூல்கள் மூலமும் உரையும்) – Saiva Siddhanta Novelty Corporation.

Tholkappiyam – Naccinarkiniyar text (தொல்காப்பியம் - நச்சினார்கினியர் உரை). (2010). Chennai: Sharada Publications.

Chellappah. (1918). Tonmam (தொன்மம்). Madurai: Kadirmahadevan Publications.

Published

2020-01-02
Statistics
Abstract Display: 633
PDF Downloads: 558

Issue

Section

Original Articles

How to Cite

N.Hemamalini. (2020). The Tamil life philosophy [தமிழர் தம் மெய்யியலும் வாழ்வியலும்]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(1), 29-35. https://doi.org/10.33306/mjssh/52